உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் திருபவித்ர உத்ஸவம் நிறைவு

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் திருபவித்ர உத்ஸவம் நிறைவு

திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் திருபவித்ர உத்ஸவம் நிறைவடைந்தது.


சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் திருபவித்ர உத்ஸவம் மூன்று நாட்கள் நடைபெறும். ஆண்டு தோறும் கோயிலில் நடந்த தோஷங்கள் நிவர்த்திக்காக வைகானஸ ஆகம முறைப்படி, தென்னாச்சார்ய சம்பிரதாயப்படி பட்டாச்சர்யர்கள் இந்த உத்ஸவத்தை நடத்துகின்றனர். செப்.14 ல் ஏகாதசியன்று உத்ஸவ துவக்கத்தன்று காலையில் பெரிய பெருமாள் சன்னதியில் மூலவருக்கு 108 கலசாபிேஷகம் நடந்தது. மாலையில் யாகசாலையில் யாகபூஜைகள் நடந்து பெருமாளுக்கு ரக்சா பந்தனம் நடந்தது. தொடர்ந்து பவித்ரமாலை பிரதிஷ்டை நடந்தது. இரண்டாம் நாளில் கோயிலில் உள்ள அனைத்து சுவாமிகளுக்கும் பவித்ரமாலை சாத்தப்பட்டது. தொடர்ந்து மகாசாந்தி ேஹாமம் நடந்தது.நேற்று காலை 11:00 மணி அளவில் மூலவர் பெருமாளுக்கு நவகலச திருமஞ்சனம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு சுவாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் தென்னமரது வீதி உலா நடந்தது. பின்னர் யாகசாலையிலிருந்து கலசங்கள் மூலவர் சன்னதி புறப்பாடு ஆகியது. தொடர்ந்து மூலவருக்கு மகா சம்ப்ரோசனம் நடந்தது. உத்வஸ நாட்களில் பட்டாச்சார்யர்களால் திருவாய்மொழி பாசுரம் பாடப்பட்டு சாற்று முறை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !