புரட்டாசி துவக்கம்; தங்க கவச அலங்காரத்தில் சீனிவாசப்பெருமாள் அருள்பாலிப்பு
ADDED :399 days ago
போடி; புரட்டாசி துவக்க நாளை முன்னிட்டு போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் தங்க கவச அலங்காரத்தில் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் சீனிவாசப் பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் தரிசனம் பெற்றனர். சிறப்பு பூஜைகள், சுவாமி அலங்காரத்தினை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்திருந்தார். அன்னதானம் வழங்கப்பட்டன.
* போடி மேலச்சொக்கநாதபுரத்தில் தொட்டராயர் ஒன்னம்மாள் கோயில், சிலமலை சீனிவாசப் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.