திருச்செந்தூர் கடற்கரையில் பவுர்ணமி வழிபாடு; புனித நீராடி பக்தர்கள் வழிபாடு
ADDED :495 days ago
திருச்செந்தூர்; புரட்டாசி பவுர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் பக்தர்கள் குவிந்தனர். நேற்று இரவு முழுவதும் தங்கியிருந்து வழிபாடு செய்தனர். பவுர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் இன்று காலை கடல் சுமார் 75 அடி வரை உள்வாங்கி காணப்பட்டது. பச்சை பாறைகள் வெளியே தெரிந்தன. ஆனாலும் பக்தர்கள் பயமின்றி புனித நீராடி சுவாமியை தரிசனம் செய்தனர்.