கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் கேரள ராணி தரிசனம்
ADDED :444 days ago
கன்னியாகுமரி; இந்தியாவின் தெற்கு எல்லையாக விளங்குவது கன்னியாகுமரி. கிழக்கே வங்காள விரிகுடா, மேற்கே அரபிக்கடல், தெற்கே இந்தியப் பெருங்கடல் என்று மூன்று கடல் சங்கமிக்கிற இடம். அதிகாலையில் சூரிய உதயத்தையும், மாலையில் அஸ்தமனத்தையும் கண்டு ரசிப்பதற்கு ஏராளமானவர்கள் கூடுவர். இந்தக் கடற்கரை ஓரத்தில் தவக்கோலத்தில் அருள்பாலித்து வருகிறாள் குமரி அம்மன். சிறப்பு மிக்க இக்கோவிலில் திருவனந்தபுரம் கவுடியார் அரச குடும்பத்தை சேர்ந்த ராணிகவுரி பார்வதி பாய் ஓண திருநாள், பவுணர்மி பூஜையை முன்னிட்டு கன்னியாகுமரி பகவதி அம்மனை தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை செய்யப்பட்டது.