திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி வழிபாடு
ADDED :413 days ago
திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி வழிபாடு துவங்கியது.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் இன்று செப்.21 முதல் புரட்டாசி சனி உத்ஸவம் துவங்கியது. உத்ஸவ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியருடன் மூலவர் சன்னதி முன் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். சாமி தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் வசதிக்காக வரிசையில் செல்ல பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பக்தர்களுக்கு காலை 8 மணி முதல் 10:30 மணிவரை காலைஉணவும் தொடர்ந்து மதிய உணவும் வழங்கப்படும். ஏற்பாட்டினை சமஸ்தான கண்காணிப்பாளர் சேவற்கொடியோன் செய்துள்ளார்.