கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் கிருத்திகை விழா
ADDED :416 days ago
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு வள்ளிதேவசேனா சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு காலை 6:00 மணிக்கு மூலமூர்த்தி களுக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தொடர்ந்து. வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர்க்கு விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசகம், கலச ஸ்தாபனம், பஞ்சாசன பூஜை, பஞ்சாவரண பூஜை, மூலவர் சுப்பிரமணியருக்கு மகாஅபிஷேகம், வெள்ளிக்க கவச அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. மாலை அர்ச்சனை, சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.