உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலில் நவராத்திரி விழா; பந்தக்கால் நடப்பட்டது

திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலில் நவராத்திரி விழா; பந்தக்கால் நடப்பட்டது

சென்னை; திருவொற்றியூரில் அருள்மிகு தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் திருக்கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு தெற்கு நோக்கி வீற்றிருக்கும் வடிவுடை அம்மன் கோவில் வளாகத்தில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. 


ஒன்பது நாட்கள் நடக்கவிருக்கும்  நவராத்திரி விழாவை வரவேற்கும் விதமாக பந்த கால் நடும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபாடு வருகின்ற 3 ஆம் தேதி  கொடியேற்றத்துடன்  இந்த நவராத்திரி திருவிழா  12ம் தேதி வரை நடைபெறும். இந்த நவராத்திரி திருவிழாவின் முதல் நிகழ்வாக வடிவுடையம்மன் கோவில் பிரகாரத்தில் புனித நீருடன் கலசங்களை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து உற்சவர் மற்றும் மூலவர்களுக்கு அபிஷேகம் செய்து பின்னர் கோவில் பக்தர்கள் முன்னிலையில் நவதானியங்களை குழியில் போட்டு சிறப்பு தீப தூப ஆராதனைகள் செய்து பக்தர்கள் அன்னையே பராசக்தியே என கோஷங்களுடன் பந்தல்கால் நடும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நவராத்திரி முன்னிட்டு  தினமும் தபசு அலங்காரம் பராசக்தி அலங்காரம் நந்தினி அலங்காரம் கௌரி பத்மாவதி உமா மகேஸ்வரி ராஜராஜேஸ்வரிசரஸ்வதி உள்ளிட்ட அலங்காரங்கல் செய்யப்பட்டு தினமும் சாமி வீதி உலா மாடவீதி உற்சவம்  நடைபெறும். தினமும் கோயில் வளாகத்தில் பக்தி இசை நாட்டிய நிகழ்ச்சி நடைபெறும். தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோவிலில்  தேவிக்கு நடத்தப்பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !