இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :746 days ago
கோவை; தாமஸ் வீதி - தெலுங்கு வீதி சந்திப்பில் அமைந்துள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் புரட்டாசி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இதில் தங்கக் காப்பு கவசத்தில் புஷ்ப அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை தரிசனம் செய்தனர்.