உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி லட்டு விவகாரம்; அழகர்கோவில் தோசை ஆய்வு

திருப்பதி லட்டு விவகாரம்; அழகர்கோவில் தோசை ஆய்வு

அழகர்கோவில்; அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் அறநிலையத்துறை கமிஷனர் ஸ்ரீதர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.


கள்ளழகர் கோயில் பிரசாதமாக தோசை விற்கப்படுகிறது. நெய்யில் சுட்டு எடுக்கப்படும் இந்த தோசை ஒன்று ரூ.40க்கு விற்கப்படுகிறது. இதற்கான நெய் ஆவினில் இருந்து வாங்கப்படுகிறது. திருப்பதி லட்டு பிரசாத தயாரிப்பில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், நேற்று கள்ளழகர் கோயிலுக்கு அறநிலையத்துறை கமிஷனர் ஸ்ரீதர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தோசை பிரசாதம் தயாரிப்பு குறித்த விபரங்களை கேட்டறிந்தார். பின்னர் பிரசாதம் தயாரிக்கும் நவீன கூடம், கோயில் புனரமைப்புப் பணிகள், பக்தர்களுக்கான வசதிகள், மலைப்பாதை ரோடு பணிகளை ஆய்வு செய்தார். இணை கமிஷனர்கள் செல்லத்துரை, கிருஷ்ணன், லட்சுமணன், சட்ட உதவி கமிஷனர் ராஜா உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !