உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே கிடைக்கும் தரிசனம்: ஆனந்த சயன பெருமாளை கண்டு பக்தர்கள் பரவசம்

ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே கிடைக்கும் தரிசனம்: ஆனந்த சயன பெருமாளை கண்டு பக்தர்கள் பரவசம்

தேனி: ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே புரட்டாசி நான்காவது வாரம் ஆதிசேஷன் மீது அமர்ந்த ஆனந்த சயன பெருமாள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் ஸ்ரீனிவாச பெருமாளை  ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.


தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள்கோவில். போடிநாயக்கனூரை ஆண்ட ஜமீன்தார்களால் உருவாக்கப்பட்டு 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோவில் . தற்போது இந்து அறநிலைத்துறை மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மற்றும் மார்கழி மாதம் பூஜைகள் மற்றும் வைணவ பூஜைகள் வெகு சிறப்பாக இங்கு கொண்டாடப்பட்டு வருகிறது. புரட்டாசி மாதம் சனிக்கிழமை தோறும் சீனிவாச பெருமாளுக்கு விசேஷ அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இன்று புரட்டாசி மாதம் நான்காவது சனிக்கிழமை மற்றும் புரட்டாசி மகாளய அமாவாசை ஒரே நாளில் வருவதை முன்னிட்டு ஸ்ரீனிவாச பெருமாளுக்கு ஆதிசேஷன் மீது அமர்ந்த அனந்த சயனப் பெருமாள் அலங்காரம் செய்யப்பட்டது. 12 அடி உயர தாமரைப்பூ மாலை மற்றும் 12 அடி உயர பாதம் பருப்பு முந்திரி பருப்பு மற்றும் ஏலக்காய் கிராம்பு போன்ற நறுமண பொருட்களால் உருவாக்கப்பட்ட மாலை மற்றும் பல்வேறு வண்ண மலர்களால் உருவாக்கப்பட்ட மாலைகள் மூலம் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருக்கும் சீனிவாச பெருமாளுக்கு நட்சத்திர தீபம் போன்ற பல்வேறு தீபங்கள் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. ஆதிசேஷன் மீது அமர்ந்த ஆனந்த சயன பெருமாள் திரு அலங்காரம்  ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே புரட்டாசி நான்காவது வாரம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !