உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விக்கிரவாண்டி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி நான்காவது சனிக்கிழமை உற்சவம்

விக்கிரவாண்டி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி நான்காவது சனிக்கிழமை உற்சவம்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசிநான்காவது சனிக்கிழமை உற்சவம் சிறப்பாக நடந்தது.


விக்கிரவாண்டியில் அமைந்துள்ள பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத நான்காவதுசனிக்கிழமை முன்னிட்டு மூலவர்ஸ்ரீ தேவி , பூதேவி சமேத வரதராஜ பெருமாளுக்கும், உற்சவருக்கும்சிறப்பு திருமஞ்சனம் செய்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீப ஆராதனை நடந்தது. உற்சவர் கோவில் வளாகத்தினுள் வலம் வந்து ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விக்கிரவாண்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் ,பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர், அபிஷேகம் மற்றும் பூஜைகளை கோவில் பட்டாட்சாரியார் மாலோலன் முன் நின்று செய்தார். விழா ஏற்பாடுகளை நான்காவது சனிக்கிழமை உபயதாரர்கள் , முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !