உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரையில் மகாளய அமாவாசை: வைகை கரையில் திரண்ட மக்கள்.. முன்னோரை வழிபட்டனர்

மதுரையில் மகாளய அமாவாசை: வைகை கரையில் திரண்ட மக்கள்.. முன்னோரை வழிபட்டனர்

மதுரை: மதுரையில் மகாளய அமாவாசையை முன்னிட்டு இன்று வைகை ஆற்றின் கரையோரம் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து ஏராளமான பொதுமக்கள் வழிபாடு நடத்தினர். 


மறைந்த முன்னோர்களுக்கு வருட திதி கொடுக்க தவறியவர்கள், புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை அன்று தர்ப்பனம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என நம்பிக்கை. அந்தவகையில், புரட்டாசி மாதம் மகாளய அமாவாசையான இன்று  மதுரை வைகை கரையோரம் ஏராளமானவர்கள் தங்களது முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்தனர்.அரிசி, காய்கறி, கீரை உள்ளிட்ட பொருட்களை புரோகிதர்களுக்கு தானமாக வழங்கி மறைந்த தங்கள் முன்னோர்களை நினைத்து எள் தண்ணீரை மதுரை வைகை ஆற்றில் விட்டு சூரிய பகவானை தரிசனம் செய்து தங்கள் கடமையை நிறைவேற்றினர். இதில் ஆண்கள் பெண்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.  இதேபோன்று மதுரையில் பல்வேறு கோவில்களிலும் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்திட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !