புரட்டாசி சனிக்கிழமை: ஸ்ரீரங்கத்தில் குவிந்த பக்தர்கள்.. நான்கு மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் புரட்டாசி 4ம் சனிக்கிழமையை முன்னிட்டு தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் புரட்டாசி மாத நான்காம் சனிக்கிழமையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். நீண்ட வரிசையில் நான்கு மணி நேரம் காத்திருந்து தரிசனம். தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வெண்பொங்கல் பிரசாதம் இலவசமாக விநியோகப்பட்டது. வரிசையில் நிற்கும் வயதான பக்தர்கள் வசதிக்காக இருக்கைகள் அமைக்கப்பட்டு, பக்தர்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் வருகையையொட்டி கூட்ட நெரிசலின்றி வழிபாடு செய்வதற்காக கோயில் நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் தலைமையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.