அன்னூர் பெருமாள் கோவில்களில் புரட்டாசி திருவிழா
அன்னூர் அன்னூர் வட்டாரத்தில் பெருமாள் கோவில்களில் நேற்று புரட்டாசி திருவிழா நடந்தது.
அன்னூரில், 300 ஆண்டுகள் பழமையான கரிவரதராஜ பெருமாள் கோவிலில், நேற்று காலை 5:00 மணிக்கு, ஸ்ரீதேவி பூதேவி உடனமர் கரிவரதராஜ பெருமாளுக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. ஊட்டி, காரமடை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பிரசித்தி பெற்ற மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவிலில், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு, மகா அபிஷேகமும், திருமஞ்சனமும் நடந்தது. காலை 10:00 மணிக்கு, அச்சம் பாளையம் செல்வ விநாயகர் குழுவின் இசை கச்சேரி நடந்தது. இதையடுத்து, அவிநாசி, அபிநயா அகாடமியின் பரதநாட்டியம் நடைபெற்றது. குன்னத்தூர் புதூர் வெங்கடேச பெருமாள் கோவில், வரதையம்பாளையம் பெருமாள் கோவில், பொங்கலூர் கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில், நேற்று புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது.