திருவதிகை சரநாராயண பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம்
ADDED :567 days ago
பண்ருட்டி; திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று அமாவாசையை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் அருள்பாலித்தார். பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் புரட்டாசி மாதம் முழுவதும் மூலவர் திருப்பதி திருமலை வெங்கடாஜலபதி அலங்காரத்தில் அருள்பாலித்து வருகிறார். நேற்று அமாவாசை முன்னிட்டு காலை உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவியுடன் உள்புறப்பாடு நடந்து, தொடர்ந்து, திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.