நவராத்திரி விழா ; ராமேஸ்வரம் கோயிலில் ஸ்ரீசக்கரம் பூஜை
ADDED :445 days ago
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நவராத்திரி விழா யொட்டி ஸ்ரீ சக்கரம் சுவாமிக்கு அபிஷேகம், பூஜை நடந்தது். ராமேஸ்வரம் கோயிலில் நவராத்திரி விழா அக்., 2ல் பர்வதவர்த்தினி அம்மனுக்கு காப்பு கட்டி விழா துவங்கியது. 2ம் நாள் விழாவான நேற்று கோயிலில் அம்மன் சன்னதி அருகில் கோயில் குருக்கள் கிரி ஜோஸி, ஸ்ரீ சக்கர சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 11 வகை அபிஷேகம் செய்து மகா தீபாராதனை நடத்தினார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதனைதொடர்ந்து கோயிலில் இரவு 9 மணிக்கு நிறைநிலை திருமகள் மகாலட்சுமி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.