உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் வள்ளலார் பிறந்தநாள் விழா

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் வள்ளலார் பிறந்தநாள் விழா

கடலுார்; வள்ளலார் பிறந்தநாளையொட்டி, கடலுார் பீச்ரோட்டில் உள்ள சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் சிறப்பு ஜோதி வழிபாடு நடந்தது. திருக்கண்டீஸ்வரம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய யோகசாலை நிறுவனர் சிவராமனார் தலைமை தாங்கினார். தலைவர் சிவநேசன், பொருளாளர் மணிவண்ணன், துணைத் தலைவர்கள் பொன்னுசாமி, ஏகாம்பரம் முன்னிலை வகித்தனர். செயலாளர் சபாபதி வரவேற்றார். தொடர்ந்து தியானம், அகவல் உணர்ந்து ஓதுதல், சன்மார்க்க சொற்பொழிவு, இசைக்கச்சேரி, மாணவ மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !