உத்திரமேரூர் துர்க்கை அம்மன் கோவிலில் நவராத்திரி விழா விமரிசை
ADDED :397 days ago
உத்திரமேரூர்; உத்திரமேரூரில், 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர் கால துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 27ம் ஆண்டு நவராத்திரி விழா, கடந்த 3ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் இரவு, கோமாதா பூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து, வராஹி அம்மன் அவதாரத்தில் துர்க்கை அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தீபாராதனை மற்றும் சிறப்பு அபிஷேக பூஜைகள், அன்னதானம் நடந்தது. நவராத்திரியில், 8வது நாளான துர்காஷ்டமி அன்று கோவில் வளாகத்தில், திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில், 208 பெண்கள் விரதம் இருந்து திருவிளக்கு பூஜையில் பங்கேற்க உள்ளனர்.