பரமக்குடி கோயில்களில் நவராத்திரி விழா; சிறப்பு வழிபாடு
ADDED :372 days ago
பரமக்குடி; பரமக்குடியில் உள்ள கோயில்களில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. பரமக்குடியில் உள்ள பெரும்பாலான கோயில்களில் நவராத்திரி விழாவையொட்டி கொலு பொம்மைகள் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பெருமாள் கோயில்களில் தாயார், சிவன் கோயில்களில் அம்பாள் மற்றும் அம்மன் கோயில்களில் மூலவர், உற்சவருக்கு தினமும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. ஏராளமான பெண்கள் கோலாட்டம் ஆடியும், கும்மி அடித்தும் கொண்டாடி வருகின்றனர். நேற்று மாலை துர்க்கை அம்மன் கோயிலில் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.