உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரம்பூரில் விஸ்வபிரம்ம ஜெயந்தி விழா; வரும் 17ல் சிறப்பு யாகம்

பெரம்பூரில் விஸ்வபிரம்ம ஜெயந்தி விழா; வரும் 17ல் சிறப்பு யாகம்

சென்னை; பெரம்பூர், திருவள்ளுவர் திருமண மண்டபத்தில் விஸ்வபிரம்ம ஜெயந்தி விழா வரும் 17ம் தேதி நடைபெற உள்ளது.


ஸ்ரீ ஜெயம் அறக்கட்டளை மற்றும் பெரம்பூர் விஸ்வகர்மா சமூக மக்கள் இணைந்து நடத்தும் ஸ்ரீ விஸ்வபிரம்ம ஜெயந்தி விழா வரும் 17 ம்தேதி வியாழக்கிழமை பெரம்பூர், திருவள்ளுவர் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு, காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை யாக பூஜை நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீ ஜெயம் அறக்கட்டளை செய்து வருகின்றனர்.


நிகழ்ச்சி நிரல்


காலை 5.30 மணியளவில் கணபதி ஹோமம்

காலை 7 மணியளவில் ஐந்து கன்றுடன் பசுகளை கொண்டு கோமாதா பூஜை

காலை 8 மணியளவில் ஐந்து குதிரைகளை கொண்டு அஸ்வமேதா பூஜை

காலை 9 மணியளவில் விஸ்வகர்மா ஐவர்ண கொடியேற்றம்

காலை 10 மணியளவில் ஸ்ரீ விஸ்வ பிரம்ம மகா யாகம்

மதியம் 12 மணியளவில் விஸ்வகர்மா மக்களுக்கு மரியாதை செய்தல்

மதியம் 12.30 மணியளவில் ஸ்ரீ ஜெயம் அறக்கட்டளை சார்பில் நலத்திட்டம் வழங்குதல்

மதியம் 1 மணியளவில் உணவு உபசரிப்பு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !