அருப்புக்கோட்டை ஸ்ரீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம்
ADDED :365 days ago
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள செல்வ விநாயகர் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீனிவாச பெருமாள் சாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு ஆண்டுதோறும் திருக்கல்யாண வைபவம் நடைபெறுவது வழக்கம். திருக்கல்யாணத்தில் சீனிவாச பெருமாள் வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அபிஷேக, ஆராதனைகள் நடந்தது, திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்தனர்.