ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் குவிந்தனர் பக்தர்கள்
ADDED :549 days ago
ராமேஸ்வரம்; விடுமுறை தினத்தை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் நேற்று பக்தர்கள் இரண்டு மணிநேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி என தொடர் விடுமுறையால் நேற்று ராமேஸ்வரம் கோவிலுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்தனர். முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு கோவில் வளாக 22 தீர்த்தங்களில் நீராடினர். பின் கோவிலுக்குள் சுவாமி, அம்மன் சன்னிதியில் நடந்த பூஜையில் வரிசையில் 2 மணிநேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் கோவில் மேலவாசல், ரத வீதி, அக்னி தீர்த்த கடற்கரை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.