சாரம் முத்துக்குமார சுவாமி கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :166 days ago
புதுச்சேரி: புதுச்சேரி சாரம் முத்துவிநாயகர், முத்துக்குமார சுவாமி மற்றும் நாகமுத்து மாரியம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
விழாவின் மூன்றாம் நாள் உற்சவமான நேற்று, நாகமுத்து மாரியம்மனுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. மங்கள வாத்தியங்கள் முழங்க, ஊஞ்சலில் அமர்ந்து அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் உபயதாரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்குப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகிகள் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.