ஆண்டித்தேவன் வலசை பகவதி அம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவ விழா
ADDED :436 days ago
ரெகுநாதபுரம்; வண்ணாங்குண்டு செல்லும் வழியில் உள்ள ஆண்டித்தேவன் வலசையில் முளைப்பாரி உற்ஸவம் விழா நடந்தது. கடந்த பத்து நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. மூலவர் விநாயகர், முருகன், பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நிறைவேற்றப்பட்டது. நேற்று சக்தி கரகம் முன்னே செல்ல பாரி ஊர்வலம் நடந்தது. இன்று காலை 9:00 மணிக்கு பால்குடம், அக்னி சட்டி உள்ளிட்ட நேர்த்திக்கடன் பூஜைகளும் நடந்தது. ஏராளமான பெண்கள் பொங்கலிட்டனர். முளைப்பாரி ஊர்வலத்திற்கு பின்பு மாலை 4 மணிக்கு உப்பு ஊருணியில் பாரி கங்கை சேர்க்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆண்டித்தேவன் வலசை கிராம மக்கள் செய்திருந்தனர்.