ஞான மூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோயிலில் தசரா விழா
ADDED :379 days ago
திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே சின்னாண்டி வலசை ஊராட்சியில் உள்ள சங்கன்வலசையில் தசரா விழா நடந்தது. சங்கன்வலசையில் உள்ள ஞான மூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோயிலில் நேற்று கணபதி ஹோமம், சிறப்பு தீபாராதனை, கரகம் எடுத்து நகர்வலம் வருதல், முளைப்பாரி ஊர்வலம், மயான காளி பூஜை உள்ளிட்டவைகள் நடந்தது. இன்று காலை 10:00 மணிக்கு நேர்த்திக்கடன் பக்தர்களால் பால்குட ஊர்வலம், அக்னி சட்டி உள்ளிட்டவைகளும் வலம் வந்தது. கோயில் முன்புறமுள்ள வளாகத்தில் இரவில் பூக்குழி இறங்கி ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் பூஜைகளை நிறைவேற்றினர். பகலில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பூஜகர் பாலா, ஈழக்காளி தசரா குழுவினர் செய்திருந்தனர்.