/
கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் நடராஜர் கோவிலில் ருத்ர மகாபிஷேகம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ருத்ர மகாபிஷேகம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
ADDED :380 days ago
சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவிலில், ருத்ர மகா அபிஷேகத்தில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், புரட்டாசி மாத மகாபிஷேகம் நேற்று நடந்தது. அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, உச்சிகால பூஜை வரை சுவாமிக்கு லட்சார்ச்சனை நடந்தது. மாலை, கனகசபையில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்தி எழுந்தருள செய்து விபூதி, பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக, நேற்று காலை கிழக்கு கோபுர வாயில் அருகே ஸ்ரீசபையில் லட்சார்ச்சனை, யாகசாலையில் கடஸ்தாபனம், மகா ருத்ர யாகம் நடந்தது.