முருக பக்தர்கள் மன்றத்தினர் கந்தசஷ்டி கூட்டுப் பாராயணம்!
புதுச்சேரி: புதுச்சேரி முருக பக்தர்கள் நற்பணி மன்றம் சார்பில், வாழைக்குளம் செங்கழுநீரம்மன் கோவிலில் 7ம் ஆண்டு கந்தசஷ்டி கூட்டுப் பாராயண நிகழ்ச்சி நடந்தது. உலக நன்மைக்காகவும், இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களைக் காக்கவும் வேண்டி, இந் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முருகேச கந்தசாமியின் திருப்புகழ் மங்கல இசையுடன் நிகழ்ச்சி துவங்கியது. டாக்டர் ரத்தின ஜெனார்த்தனன், 36 முறை கந்தசஷ்டி ஓதும் கூட்டுப் பாராயண நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். முருகனின் அவதாரம் குறித்த ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. முன்னாள் சபாநாயகர் பழனிராஜா, பழனி ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு கந்தசஷ்டி கவசம் அடங்கிய புத்தகம், சிற்றுண்டி, அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மன்ற நிர்வாகிகள் கலியமூர்த்தி, செயலாளர் கொல்பேர் ஜெயபாலன், துரைசாமி ஆகியோர் செய்தனர்.