உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கராபுரம் சவுந்தர்ராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம்

சங்கராபுரம் சவுந்தர்ராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம்

சங்கராபரம்; சங்கராபுரம் அடுத்த எஸ்.வி.பாளையம் கிராமத்தில் ஸ்ரீ தேவி பூ தேவி சமேத சவுந்தர்ராஜ பெருமாள் திருக்கல்யாண வைபவம் நடந்தது. கோகுல கிருஷ்ண பஜனை மடத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு இளையாழ்வார் தலைமை தாங்கி, பெருமாள் திருக்கல்யாண வைபவத்தை நடத்தி வைத்தார். ஓய்வு பெற்ற தீயணைப்பு அலுவலர் அய்யப்பன், பத்மசாலிய சங்க தலைவர் செல்வராஜ், அண்ணாமலை, மணவாளன், குருசாமி உட்பட பலர் பங்கேற்றனர். பெருமாள் திருக்கல்யாண வைபவத்தை  முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !