திருவாதிரை விரதம்; நடராஜரை வழிபட நல்லதே நடக்கும்
ADDED :699 days ago
திருவாதிரை நடராஜருக்குரிய சிறப்பான விரதநாள் ஆகும். நட்சத்திரங்களில் ‘திரு என்ற அடைமொழியோடு வருவது ஆதிரை மற்றும் ஓணம் மட்டுமே. ஆடல்வல்லானின் ஆட்டத்தாலேயே அண்டசராசரங்களும் இயங்குகின்றன. முருகப்பெருமான் திருவாதிரை விரதம் இருந்து ஈசனின் அருள்பெற்றார். சுவாமிக்கு களி, தயிர்ச்சாதம், சுண்டல் நிவேதனம் செய்வது சிறப்பு. சிவாலயம் சென்று நடராஜரின் தாண்டவ தீபாராதனை தரிசிக்க வேண்டும். வீட்டில் சிவபுராணம், தேவாரம், திருவாசகத்தை பக்தியுடன் படிக்க வேண்டும். மாதந்தோறும் திருவாதிரை விரதமிருந்து கயிலாயத்தில் வாழும் பேறு பெறுவோம்..!