உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரணவ மலை விநாயகர் கோவில் பராமரிக்க பக்தர்கள் வலியுறுத்தல்

பிரணவ மலை விநாயகர் கோவில் பராமரிக்க பக்தர்கள் வலியுறுத்தல்

திருப்போரூர்; திருப்போரூர் பிரணவ மலையில், பாலாம்பிகை உடனுறை கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த மலைக்கோவிலில், தினமும் காலை, மாலை நேரங்களில், பூஜையுடன் மாதத்தில் இரண்டு முறை பிரதோஷ வழிபாடும் நடத்தப்படுகிறது. இக்கோவிலுக்கு மலை படிக்கட்டில் ஏறிச்செல்லும் வழியில், இடது பக்கம் தனி விநாயகர் சன்னிதி உள்ளது. மலை கோவிலுக்கு வரும் பக்தர்கள், முதலில் விநாயகரை வழிபட்டு, பின் கைலாசநாதரை வழிபடுகின்றனர். இந்த விநாயகர் கோவில் போதிய பராமரிப்பின்றி, கட்டுமானங்கள் சிதிலமடைந்துள்ளன. கோவிலை சுற்றி முட்செடிகள் படர்ந்து புதர்மண்டிக் கிடக்கின்றன. மேலும், தினசரி பூஜைகளும் முறையாக நடைபெறவில்லை என, பக்தர்கள் ஆதங்கப்படுகின்றனர். எனவே, கோவிலை சீரமைத்து, தினசரி பூஜைகள் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !