தேய்பிறை அஷ்டமி; 16 அடி உயர ஸ்வர்ண பைரவருக்கு சிறப்பு பூஜை
ADDED :383 days ago
தேவகோட்டை; ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிவன் கோவில்களில் உள்ள பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பட்டுக்குருக்கள் நகரில் உள்ள 16 அடி ஸ்வர்ண பைரவருக்கு சீரான மழையும், பயிர் விளைச்சல் பெருகவும் சிறப்பு ஹோமம் நடைபெற்றதை தொடர்ந்து பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று மாலை தேவகோட்டை நகரில் உள்ள ஸ்வர்ண ஆதர்ஷ பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு ஹோமத்தை தொடர்ந்து அபிஷேகம் அலங்காரம் பூஜைகள் நடந்தன.