லிங்கராஜபுரம் பகுதியில் கிராம தேவதை பூப்பல்லக்கு உற்சவம்
ADDED :384 days ago
பெங்களூரு; லிங்கராஜபுரம் பகுதியில் கிராம தேவதை பூப்பல்லக்கு உற்சவம் நடந்தது. நிறைவு நாளான நேற்று முன்தினம் சந்தான வேணுகோபால சுவாமி கோவிலில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. சுற்றுப்புற பகுதியில் உள்ள பல கோவில்கள் சார்பில் 15க்கும் மேற்பட்ட தேர்கள் பவனி வந்தன. அம்மனை தரிசனம் செய்ய, பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர். விடிய விடிய நடந்த தேர் ஊர்வலத்தை பயபக்தியுடன் தரிசித்தனர்.