ஐப்பசி சோமவாரம்; ஞான ஈஸ்வரர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :696 days ago
கோவை; கோவை, சாய்பாபா காலனி கே. கே. புதூர் சின்னம்மாள் தெருவில் அமைந்துள்ள ஞான ஈஸ்வரர் கோவிலில் ஐப்பசி இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ தரிசனம் செய்தனர்.