உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் கோயிலில் நவ. 2முதல் நவ. 9வரை தங்க ரதம் புறப்பாடு ரத்து

திருப்பரங்குன்றம் கோயிலில் நவ. 2முதல் நவ. 9வரை தங்க ரதம் புறப்பாடு ரத்து

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு நவ. 2முதல் நவ. 9வரை தங்க ரதம் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது. கோயிலில் தினம் இரவு 7:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி தங்கரதம் புறப்பாடு நடக்கிறது. திருவிழா காலங்களில் உற்ஸவர்கள் புறப்பாடு நடப்பதால் தங்க ரதம் புறப்பாடு ரத்து செய்யப்படும். அதன்படி நவ. 2 முதல் நவ. 8வரை கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு கோயிலுக்குள் உற்சவர்கள் புறப்பாடு நடப்பதாலும், நவ. 9ல் உற்ஸவர் சாந்தி நிகழ்ச்சியும் நடப்பதால் அந்நாட்களில் தங்க ரதம் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !