தன்வந்திரி பகவான் ஜெயந்தி திரளான பக்தர்கள் தரிசனம்
ADDED :359 days ago
உடுமலை; ஐப்பசி மாத தேய்பிறையின், 13வது நாளில், தன்வந்திரி பகவான் அவதரித்தார். இந்நாளை, ‘தந்தேராஸ்’ தினமாக வடமாநிலங்களில், வீடுகளில் திருவிளக்கு ஏற்றி வழிபாடு செய்கின்றனர். உடுமலை செல்லப்பம்பாளையம் ஆதிகேசவ பெருமாள் கோவிலில், தன்வந்திரி பகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. நேற்று தன்வந்திரி ஜெயந்தியையொட்டி, தன்வந்திரி பகவானுக்கு காலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சுற்றுப்பகுதி கிராம மக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.