தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் கோலாகலம்
ADDED :454 days ago
தூத்துக்குடி; பாகம் பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண விழாவை ஒட்டி சுவாமி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது.
துாத்துக்குடி; துாத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில், பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா, 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு, தினமும் மாலையில் அம்மன் பல அலங்காரங்களில் வாகனங்களில் வீதியுலா நடந்தது. விழாவில் நேற்று இரவு சுவாமி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.