உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்களில் தீபாவளி நோன்பு வழிபாடு; பக்தர்கள் வழிபாடு

கோவில்களில் தீபாவளி நோன்பு வழிபாடு; பக்தர்கள் வழிபாடு

புதுச்சேரி; புதுச்சேரி கோவில்களில் பெண்கள் குடும்பத்தினருடன் வந்து, கேதார கவுரி மற்றும் அமாவாசை நோன்பு எடுத்தனர். புதுச்சேரியில் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடைகள் அணிந்து பட்டாசுகள் வெடித்து, உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். இது ஒரு புறம் இருக்க, நேற்று முன்தினம் மாலை 4:30 மணிக்கு கேதார கவுரி நோன்பு துவங்கியது. இதையொட்டி, தீபாவளி தினமான நேற்று மாலை 4:30 மணி வரை, சிவன் மற்றும் அம்மன் கோவில்களில் பெண்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து நோன்பு எடுத்தனர். நேற்று மாலை 4:30 மணிக்கு துவங்கி, இன்று மாலை 5:30 மணி வரை, அமாவாசை நோன்பு எடுப்பதற்கான நேரம் உள்ளது. அதனையொட்டி, நேற்று மாலையே ஏராளமான பெண்கள், அமாவாசை நோன்பையும் கோவில்களில் எடுத்தனர். இதனால் கோவில்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !