உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன்மலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா நாளை துவக்கம்

சிவன்மலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா நாளை துவக்கம்

காங்கயம்; காங்கயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்ரமணியசாமி கோவிலில் கந்த சஷ்டி விழா நாளை தொடங்குகிறது. திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே அருணகிரிநாதர் திருப்புகழ் படிக்கும் வாசல் என்று போற்றப்படும் சிவன்மலையில் உள்ள சுப்ரமணியசாமி கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா, நாளை தொடங்கி, நவ.9 ம் தேதி வரை ஒரு வார காலம் நடைபெறுகிறது. இவ்விழாவை முன்னிட்டு காலை மணி 10.30 மற்றும் மாலை மணி 4 ஆகிய நேரங்களில் அபிஷேக ஆராதனையும், திருஉலா காட்சியும் நடைபெற உள்ளது. கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா (நவ.7 ) மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது. மறுநாள் காலையில் அபிஷேக ஆராதனையும், மாலை 6மணிக்கு முருகப்பெருமான், தெய்வானை திருக்கல்யாண உற்சவமும் நடைபெற உள்ளது. 9 ம் தேதி சுவாமி மலைக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்த விழாவிற்க்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் இரத்தினாம்பாள் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !