கல்பாத்தி தேர் திருவிழா: பிரசன்ன மஹா கணபதி கோவிலில் முகூர்த்தகால் நிகழ்வு
ADDED :449 days ago
பாலக்காடு; கல்பாத்தி தேர் திருவிழாவின் ஒரு பகுதியாக சாத்தபுரம் பிரசன்ன மகா கணபதி கோவிலில் முகூர்த்தகால் நாட்டும் நிகழ்வு நடந்தன. கேரள மாநிலம் பாலக்காடு கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர், மந்தக்கரை மகா கணபதி, பழைய கல்பாத்தி லட்சுமி நாராயண பெருமாள், சாத்தபுரம் பிரசன்னா மகா கணபதி கோவில்களில் தேர் திருவிழா, நவ., 6ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடக்கிறது. திருவிழாவின் கொடியேற்றம் நவ. 7ம் தேதியும், 13, 14, 15 தேதிகளில் திருத்தேரோட்டமும் நடக்கிறது. இந்த நிலையில் சாத்தபுரம் பிரசன்ன மகா கணபதி கோவிலில் திருவிழாவின் ஒரு பகுதியான முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு வேதப்பாராயணத்துடன் ஸ்ரீகாந்த் பட்டாச்சாரியாவின் தலைமையில் நடந்தது.