சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா
ADDED :305 days ago
சின்னாளபட்டி; சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில், கந்த சஷ்டி விழா நேற்று கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நவக்கிரக ஹோமம், மகா கணபதி அபிஷேகத்துடன் முதற்கால யாகசாலை பூஜைகள் நடந்தது. வேதிகார்ச்சனை, மகா தீபாராதனை, பிரசாதம் வழங்கல் நடந்தது. மூலவர், உற்சவருக்கு சிறப்பு மலர் அலங்காரத்துடன் ஆராதனைகள் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ரெட்டியார்சத்திரம்: ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயிலில், சஷ்டி விழா, நேற்று துவங்கியது. முன்னதாக கணபதி பூஜை, மூலவருக்கு திரவிய அபிஷேகம், சிறப்பு மலர், கருங்காலி மாலை அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவங்கினர்.