வரதராஜப் பெருமாள் கோவிலில் மணவாள மாமுனிகள் மகோற்சவம்
ADDED :690 days ago
புதுச்சேரி; காந்தி வீதி வரதராஜப் பெருமாள் கோவிலில் மணவாள மாமுனிகள் மகோற்சவ உற்சவம் நடந்தது. புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள பெருந்ததேவி தாயார் வரதராஜப் பெருமாள் கோவிலில், மணவள மாமுனிகள் 655 வது வருட திருநட்சத்திர மகோற்சவம் கடந்த 27ம் தேதி துவங்கி நாளை மறுநாள் 6ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி, தினமும் காலை திருமஞ்சனம், மாலை சன்னதி புறப்பாடு, சேவை சாற்று முறை நடந்து வருகிறது. 8வது நாளான நேற்று காலை பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், மாலை சன்னதி புறப்பாடு நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.