/
கோயில்கள் செய்திகள் / போடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா : விரதம் துவங்கிய பக்தர்கள்
போடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா : விரதம் துவங்கிய பக்தர்கள்
ADDED :499 days ago
போடி; போடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. போடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கோயில் பரம்பரை அறங்காவலர் முத்துராஜன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் சுந்தரி முன்னிலை வகித்தார். வள்ளி, தெய்வானையுடன் தங்க கவச அலங்காரத்தில் முருகனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனின் தரிசனம் பெற்றனர். சுவாமி அலங்காரத்தினை விக்னேஸ்வர கந்த குருக்கள் செய்திருந்தார். சஷ்டி விரதம் துவங்கும் வகையில் பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. கந்த சஷ்டி திருவிழா ஒட்டி தினம் தோறும் முருகனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடக்கிறது.