உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நத்தம் அரண்மனை சந்தனக் கருப்பு சுவாமி கோவிலில் மண்டல பூஜை விழா

நத்தம் அரண்மனை சந்தனக் கருப்பு சுவாமி கோவிலில் மண்டல பூஜை விழா

நத்தம்; நத்தம் அரண்மனை சந்தனக் கருப்பு சுவாமி கோவிலில் ஏற்கனவே கும்பாபிஷேக விழா நடந்தது.தொடர்ந்து தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது. இதைத் தொடர்ந்து நேற்று 48-ம் நாள் மண்டல பூஜை விழா நடந்தது. இதையொட்டி கோவிலில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது.தொடர்ந்து அரண்மனை சந்தனக்கருப்பு சுவாமிக்கு பால், பழம்,சந்தனம், விபூதி, இளநீர், புஷ்பம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதைப்போலவே குட்டூர் முத்தாலம்மன் கோவிலிலும் 48-ம் நாள் மண்டல பூஜை விழா நடந்தது. இதில் கோவில் வளாகத்தில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !