காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் பாலாலயம்
ADDED :396 days ago
காரைக்கால்; காரைக்கால் நித்யகல்யாணப்பெருமாள் கோவில் குடமுழுக்கு திருப்பணியை முன்னிட்டு பாலாலயம் நிகழ்ச்சி நடந்தது. காரைக்கால் கயிலாசநாதர், நித்யகல்யாணப் பெருமாள் வகையறா தேவஸ்தானத்தை சேர்ந்த நித்யகல்யாணப்பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் குடமுழுக்குத் திருப்பணிகளில் ஒரு பகுதியாக சக்கரத்தாழ்வார், நரசிம்மர்,ஆண்டாள், ஆஞ்சநேயர் உள்ளிட்ட மூல மூர்த்திகளுக்கு நேற்று பாலாலயம் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக சிறப்பு யாகத்திற்காக புனித நீரை எடுத்துவந்து கோவில் சுற்றுவந்து அனைத்து மூலவர்களுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் ஆராதனை நடந்தது. இந்நிகழ்ச்சியில் நித்யகல்யாணப்பெருமாள் பக்த ஜனசபாவினர் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.