பிரசன்ன மஹா கணபதி கோவிலில் சதுர்த்தி சிறப்பு வழிபாடு
ADDED :699 days ago
கோவை; ராம் நகர் பிரசன்ன மஹா கணபதி கோவிலில் ஐப்பசி சதுர்த்தி விரதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் மூலவர் விநாயக பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.