உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி; 15ம் தேதி உள்ளூர் விடுமுறை

மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி; 15ம் தேதி உள்ளூர் விடுமுறை

மயிலாடுதுறை; கடை முக தீர்த்தவாரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வரும் 15ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் ஐப்பசி மாத துலா உற்சவத்தின் முக்கிய திருவிழாவை கடைமுக தீர்த்தவாரி விழா வரும் 15ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு வரும் 15ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை தினத்தில் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் எனவும் இந்த உள்ளூர் விடுமுறை நாளை ஈடு செய்யும் வகையில் 23ம் தேதி சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது என்று கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !