உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடபழனி ஆண்டவர் கோவிலில் இன்று திருக்கல்யாணம்; 750 பக்தர்களுக்கு விருந்து

வடபழனி ஆண்டவர் கோவிலில் இன்று திருக்கல்யாணம்; 750 பக்தர்களுக்கு விருந்து

சென்னை; சென்னையில் மிகவும்பிரசித்தி பெற்றது, நுாற்றாண்டு பழமை வாய்ந்த வடபழனி ஆண்டவர் கோவில். தினந்தோறும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். தற்போது, கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற்றது. இன்று திருக்கல்யாணம் நடப்பதால், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர் என்பதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கல்யாண விருந்து; திருக்கல்யாணத்தை முன்னிட்டு வடபழனி ஆண்டவர் கோவில் அன்னதானக் கூடத்தில், 750 பக்தர்களுக்கு வடை, பாயசத்துடன் இரவு கல்யாண விருந்து வழங்கப்படுகிறது. தொடர்ந்து மயில்வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !