மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்
ADDED :688 days ago
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடந்தது.
மருதமலை சுப்ர மணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா கடந்து 2ம் தேதி காப்பு கட்டுதலுடன் கோலாகலமாக துவங்கியது. கோவிலில் முருகனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. விழாவில் நேற்று கோவிலில் சூரசம்ஹாரம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவில் இன்று காலை வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடந்தது. பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்தனர்.