சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் திருக்கல்யாணம்
ADDED :362 days ago
சின்னாளபட்டி; சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயில் சஷ்டி விழாவில், நேற்று திருக்கல்யாணம் நடந்தது. சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயில், கந்த சஷ்டி திருவிழா நவ. 2ல், கணபதி ஹோமத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் நடந்தது. நேற்று, சிவசுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக கணபதி ஹோமம், வேதிகார்ச்சனை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு அபிஷேக, ஆராதனைகளுடன் புறப்பாடு நடந்தது. சிறப்பு யாகசாலை பூஜைகளுடன் திருக்கல்யாணம் நடந்தது. விழாவை முன்னிட்டு ஆன்மீக சொற்பொழிவு, அன்னதானம் நடந்தது.