ராமநாதபுரம் முருகன் கோயில்களில் திருக்கல்யாண விழா
ராமநாதபுரம்; ராமநாதபுரத்தில் முருகன் கோயில்களில் திருக்கல்யாண விழா கோகலமாக நடந்தது. முருகன் கோயில்களில் நவ.2 ல் காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது. நேற்று குண்டுக்கரை சுவாமி நாத சுவாமி கோயில், பெருவயல் ரெணபலி முருகன் கோயில், வழிவிடு முருகன் கோயில் உட்பட அனைத்து கோயில்களிலும் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.பரமக்குடி: பரமக்குடியில் வள்ளி, தெய்வானை, சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று காலை 10:00 மணிக்கு சுப்ரமணியர்– தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க தரிசித்தனர். அப்போது பெண்கள் புதிய திருமாங்கல்ய கயிற்றை மாற்றி கோயிலை வலம் வந்தனர். இரவு 7:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் வீதி உலா வந்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. பாரதிநகர் முருகன் கோயிலில் மாலை திருக்கல்யாண உற்ஸவம் மிக விமரிசையாக நடந்தது.தொடர்ந்து முத்தாலம்மன் கோயில் படித்துறை பகுதியில் உள்ள செந்திலாண்டவர் கோயிலில் கந்த சஷ்டி விழா அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது.